கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு மாவை சேனாதிராஜா அவர்கட்கு என்று தொடங்கபட்ட அந்த அறிக்கையில், காலம் காலமாக வயாவிளானின் மீள் குடியேற்றம் மறுக்கப்பட்டு வருவதென்றும், எமது ஊருக்கு அருகில் உள்ள பல கிராமங்கள் விடுபட்டுள்ளதாகவும்,ஆனால் எமது மக்கள் முப்பது வருடங்களுக்கு மேல் அகதி முகாமிலும், உறவினர் வீடுகளிலும், வாழ்வாதாரம் ஏதும் அற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக சாடப்பட்டுள்ளது. அத்தோடு பலர் வாழ்வாதாரம் ஏதும் இல்லாத காரணத்தால், இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இப்படி பட்ட காரணங்களால் வயவை மக்கள் பல சிரமங்களை தொடர்ச்சியாக எதிர்கொள்ளுகின்றனர் என்றும் , வயாவிளான் மக்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி மக்களை சொந்த நிலங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.