வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் இன்று (4.2.2019 திங்கள்) விசேட பூசைவழிபாடு சிறப்பாக இடம்பெற்றது. ஈஸ்வரநாதன் சுமதி தம்பதிகளின் (பிரான்ஸ்) புதல்வன் செல்வன் சுவேதன் அவர்களின் 18ஆவது பிறந்தநாளை முன்னிட்டு செல்வன் சுவேதன் அவர்களுக்கு நல்லாசி வேண்டி இவ்விசேடபூசை நடைபெற்றிருந்தது. இதில் சிறப்பு நிகழ்ச்சியாக சங்கீர்த்தன பஜனை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
வயவையூர் அன்னைதாசன் குழுவினரால் நிகழ்த்தப்பட்ட சங்கீர்த்தன பஜனை நிகழ்ச்சி இன்றைய நிகழ்வுக்கு முத்தாய்ப்பாக அமைந்திருந்தது. நிகழ்ச்சி மக்களை மிகவும் ஈர்த்திருந்ததுடன், முக்கிய பேசுபொருளாகவும் இருந்ததெனலாம். இன்றைய பூசைவழிபாட்டில் அதிகளவான மக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அனைவருக்கும் வயாவிளான் தெற்கு ஞானவைரவரின் அருள்பாலித்து, வேண்டிய அனைத்து வேண்டுதல்களும் அவரின் இறையருளால் கிடைக்க நாமும் வைரவ பெருமானை வேண்டி நிக்கின்றோம்.