எம்மண்ணில் மீள் குடியேறிய மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள், மற்றும் சமூக நலத்தேவைகளை கண்டும் ,கேட்டும் , அறிந்தும் , அதை புலர் பெயர் நாடுகளில் உள்ள சக அமைப்புகளுக்கு தெரியப்படுத்தி, அவர்களின் உதவியுடனும், எமதூர் மக்களின் மீள் எழுச்சிக்கு மகத்தான பணியை மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பு செய்து வருகின்றது. அவர்களுக்கு முண்டு கோலாக அனைத்து வயாவிளான் ஒன்றியங்களும் விளங்குகின்றன. அந்த முண்டு கோளில் ஒன்று தான் வயாவிளான் மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பினர்.
அதாவது களத்துக்கும் புலத்துக்குமான ஒரு உறவுப்பாலமாக, இலங்கையில் இயங்கி வரும், வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவுங்காரங்கள் அமைப்பு விளங்கி வருகின்றது.
எங்கு பிறந்தாலும் எங்கு வளர்ந்தாலும் எம் தாயகமண் வயவையே
என்பதை பறைசாற்றி ஆணிவேருக்கு
உரமிடுவோம் வாரீர்.
வைகாசித் திங்களில், பொங்கிவரும் எம்மண் நினைவோடும் உணர்வோடும் வயவர்கள் நாம் திரள்திரளாக கூடி மகிழ்ந்திடுவோம்
வாரீர்.
எம் மண்ணில் வாழ்ந்த காலத்தின் நினைவுகளை மீட்டி நாம்
வயவைக்குச் சென்று திரும்பிடுவோம்
வாரீர்! வாரீர்! வாரீர்!
காலம் : 27 /05 /2018
நடைபெறும் இடம்:
Salle Angelo Davis
Rue de la Philosophie
93140 Bondy
France