ஊரின் விடுதலையும் மானம்பராய் பிள்ளையாரும்! 2

“நேற்றையதினம் தைப்பூசம் பொங்கல் பூசைக்கு இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பலாலி அம்மன் ஆலயம் ,வயாவிளான் பிள்ளையார் ஆலயம்,வயாவிளான் தென்மூலை வைரவர் ஆலயம் செல்ல இராணுவம் அனுமதி தந்து இருந்தார்கள்.ஆனாலும் இரு ஆலயத்துக்கு இரண்டு பஸ் நிறைந்த மக்கள் வந்து இருந்தனர். கவலைக்குரிய விடயம் பிள்ளையாருக்கு வெறும் ஐந்து பேர்தான். எங்களை இராணவம் கடைசியாகத்தான் விட்டார்கள். இதில் இருந்து என்ன புரிகிறது எங்களின் ஒற்றுமை. வருத்தத்திற்கு உரிய விடயம்”. அந்த சகோதரியின் ஏக்கம் இது.

சரி கடந்த வார தொடர்ச்சியை கொஞ்சம் தட்டி பார்ப்போம். தைப்பூசத்துக்கு பிள்ளையார் கோவிலுக்கு ஐவர் தான் போனதாக வேதனையுடன் தன் ஆதங்கத்தை குறிப்பிட்ட அந்த சகோதரியின் ஏக்கத்தை யார் யார் உள் வாங்கினீர்கள்? இல்லை பிள்ளையார் கோவில் நிர்வாகம் தான் இதை பற்றி சற்று யோசித்தீர்களா? இல்லை ஊரில் வாழும் பிள்ளையாரின் பக்தகோடிகள் தான் பிள்ளையாருக்கு ஏதாவது செய்யலாம் என்று சிந்தித்தீர்களா? கோவிலின் செயல்பாட்டில் ஏன் இந்த சோம்பல் தன்மை என்ற பல கேள்விகளுடன், சின்னவன் ஆகிய நான் சிந்திக்கின்றேன்.

பிள்ளையார் கோவிலுக்கு என்று ஒரு நிர்வாகம் உள்ளதை அனைவரும் அறிவீர்கள். அவர்களுக்கு என்று ஒரு முகப்புத்தக முகவரியும் உள்ளது. இருந்தும் ஏன் தைப்பூசத்துக்கான அனுமதி தகவலை அனைத்து பாமர மக்களும் அறிய கூடியதாகா இந்த தொழில் நுட்பம் கூடிய உலகத்தில் நிர்வாகம் செயல்படுத்தவில்லை? பலரின் கருத்து படி தைப்பூசத்துக்கு பிள்ளையாருக்கு போவது மற்றும் அனுமதி பற்றி தங்களுக்கு ஏதும் தெரியாது என்றே மக்கள் புலம்புகின்றனர். ஏன் பிள்ளையார் கோவில் நிர்வாத்தினர் கூட அன்று கோவிலுக்கு போகவில்லையாம் என்று பெரியவர் ஒருவர் வெடித்துரைத்தார் . ஊர் மக்களுக்கு முன்னுதாரணமாக இருப்பவர்கள் கோவில் நிர்வாகத்தினரே. அவர்களே இப்படியான கொண்டாட்டங்களை தட்டி கழிக்கும் போது, ஊர் மக்களும் அதில் ஆர்வம் கொள்ள மாட்டார்கள் என்பது தெளிவான உண்மை. முன் உதாரணமாக கோவில் நிர்வாகமே இதை கையாள வேண்டும். மானம்பிராய் பிள்ளையார் கோவிலுக்காக முழுமையாக முழு மூச்சுடன் செயல்பட்டீர்கள்? வாரத்திலோ இல்லை மாதத்திலோ ஒரு தடவை தரிசித்து வரலாம் என்று இருந்த ஆலயம் இப்போது யாருமே தரிசிக்க போகாமல் இருப்பது மிகுந்த மன வேதனையான விடயம். சிந்தியுங்கள் முதியவர்களே!

இப்படியான ஒரு சுழலில் எப்படி எமது மண்ணை இராணுவம் விட்டு செல்வார்கள்? கோவிலை வந்து தரிசிக்க நாம் கொடுத்த அனுமதிக்கே எவரும் வருகிறார்கள் இல்லை என்ற சித்தனைகள், இராணுவத்துக்கு பலவிதமான ஐயங்களை ஏற்படுத்தும். முதலில் கோவிலை முழுமையான கட்டுப்பாட்டுக்கள் நாம் கொண்டுவருதல் வேண்டும். அங்கே மக்களின் நாட்டங்கள் பெரியளவில் இருத்தல் வேண்டும்.அப்போது தான் ஊரின் விடுதலையும் கொஞ்சம் கிட்ட கிட்டதாக எம்மை நோக்கி நகரும்.

ஊரின் விடுதலைக்கு முன்னாடி, முடிந்தளவு கோவிலை புனரமைத்தல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். புனரமைக்கபட்ட கோவிலில் நாளாந்த பூசை வழிபாடுகளில் மக்கள் ஈடு படவேண்டும். கோவிலின் திருவிழாக்காலங்களை முடிந்தளவு முன்கொண்டு வர முயற்சிக்க வேண்டும். அனைவரும் சுயநலன்களை ஓரம்கட்டிவிட்டு ஊர் ஒன்று பட உழைக்க வேண்டும்.அப்போது தான் எம்மூர் எம் கையில் வரும் சாத்தியம் எள்ளளவு தன்னும் எம்மை நோக்கி வரும். கோவிலின் சுற்றாடலில் சிரமதான பணிகள் செய்யப்பட்டு உள் வீதி வெளி வீதிகளில் மக்கள் நடமாட வேண்டும். ஆரோக்கியம் இல்லாத நிர்வாகம் என்று தென்பட்டால் தள்ளிவிட்டு புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுத்தல் வேண்டும். ஆசனங்களில் சும்மா இருப்பவர்களை தள்ளி விடுங்கள்.அதில் நாம் அனைவருமே கெட்டிக்காரர்கள் தான் . செயல்பாடு இல்லாத நிர்வாகம் இருந்தும் ஒன்று கலைந்தும் ஒன்று தான். சிந்தியுங்கள் செயல்படுங்கள் உறவுகளே.

பிள்ளையாரை சுற்றி உள்ள தளங்களில் ஒன்றான கண்ணகி அம்மனுக்கு வருடாந்த சித்திரை கஞ்சி வார்வை வருவதாக அறிகின்றேன் .அப்படி அது நடக்க இருப்பின் உரியவர்கள் முன்கூட்டியே அதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். கடைசி நிமிடத்தில் அதை சொல்லாது இப்பவே அனைவருக்கும் தெரிய படுத்தி அதை ஒரு ஆரோக்கியமானதொன்றாக செயல் படுத்தி கண்ணகி அம்மனின் அருளை அனைவரும் பெற்று செல்லுங்கள்.சிந்திப்போம் செயல்படுவோம். மானம்பிராய் பிள்ளையாரின் முகப்புத்தக முகவரியின் தொடர்பினை கீழே இணைத்துள்ளோம்.

https://www.facebook.com/profile.php?id=100022743017455

சிந்திப்போம் செயல்படுவோம் உறவுகளே!

-ஊரவன்-