நமக்குத் தேவையான நிறைய வளங்கள் நம்மிடம் உண்டு. ஒரு வரம்புக்குள் அடங்கிய சாதனை என்று ஊறிப்போய் விட்ட மனநிலையை உதறி எறிந்து விட்டு வெளிவர முடிந்தது போன்ற ஒரு மனோபாவம்” என்பார் அப்துல் கலாம். மேற்கோள்களை உதாரணம் காட்டி எழுதுவதைவிட “நம்மையே” உதாரணமாக்கிக் கொண்டு எழுதுவது இயல்பாகவும், உண்மையாகவும், உயர்ப்புள்ளதாகவும் இருக்கும் என்பதால் இதைப் படிக்கின்றவர்கள், இவ்விசயத்தைச் சிந்திக்கின்றவர்கள் இத்தலைப்போடு தொடர்பு கொண்டவர்கள், தொடர்பு கொள்ள நினைக்கிறவர்கள் அனைவருமே உதாணரமாகின்றோம்.
மனித வளம்
மனித வளம் என்பேத உலகில் உள்ள எல்லா வளங்களிலும் உயர்ந்த, சிறந்த, ஒப்புயர்வற்ற வளம், என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்? என்று ஆதங்கப்பட்டவருக்கு 100 கோடி மனித வளம் புரிந்திருந்தது. ‘மனித வளத்தைப்’ புரிந்து கொடு முறையாய்ப் பயன்படுத்தியவர்களே தனி வாழ்விலும், தொழிலும், சமுதாயத்திலும், உலக அரங்கிலும் மேம்பாடு அடைந்துள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி.
‘மனித வளம்’ என்பது ஒரு தனி மனிதனின் அனைத்து ஆற்றல்களையும், சிறப்புகளையும் ஒருங்கிணைத்த உயர்வளம். அதுவே வீட்டிலும், நாட்டிலும இணையும்பொழுது குடும்ப வளமாகவும், செழிப்பான நாடாகவும், வளம் நிறைந்த சமுதாயமாகும் மலர்கின்றது.
மனித வளத்தின் முக்கிய அங்கங்களாக உடல்நலம், மன வளம், நட்பு நலம், அறிவு வளம் ஆகியவை அமைகின்றன. இவை ஒவ்வொன்றிலும் ஏற்படும் உயர்வே, மனித வள உயர்வாகும். மேலும் மனிதனின் ஆற்றல், தறமை, உள்ளுணர்வு, அனுபவம், நற்குங்கள், மேலான எண்ணங்கள், சொற்கள், செய்கைகள், அன்பு, கருணை, நிறைவு போன்றவைகளும் மனித வளத்தை மெருகூட்டுவதில் பெரும் பங்காற்றுகின்றன.
நாம் ஒவ்வொருவரும் நம்மை முதலில் நன்கு புரிந்து கொள்வதும்; நமது பலம் மற்றும் பலவீனங்களை அடையாளம் கொண்டு கொள்ளுதலும்; ஆக்கப்பூர்வமான மாற்றத்திற்கு நம்மை ஆட்படுத்துதலும் நம் ‘வளத்தை உறுதிப்படுத்தும் உணர்ச்சிகளின் பிடியிலிருந்து உணர்வின் அன்பு அரவணைப்பிற்கு மாறுவதும், இறுத்ததிலிருந்து இனிய யதார்த்த்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளுவதும், மனிதனை வளப்படுத்தும், நாமே நம்மை உருவாக்கிக்கொள்கிறோம், நம் எதிர்காலத்தையும் உருவாக்குகிறோம் என்ற பொறுப்பு நிறைந்த நம்பிக்கையே நம்மை மேம்படுத்தும். அதற்குரிய வழிமுறைகளையும் உரிய பயிற்சிகளையும் இத்தொடரில் காண இருக்கின்றோம்.
‘நமது குறிக்கோள்களில் நாம் முழு நம்பிக்கை வைக்கும் போது நமது கனவு நனவாகும். அடுதடுத்து வெற்றிகள் தொடரும்’ என்கிறார் அப்துல்கலாம்’.
மனித வாழ்வு மகத்தானது. அதில் மகிழ்வுடன் வாழ்தல் என்பது மிகவும் மேலானது. இந்த வாழ்வை உணர்வதற்கும், அறிவதற்கும், அறிந்து வாழ்வதற்கும் ‘மனம்’ இன்றியமையாதது. ‘மனித வளம்’ என்பதுதான் மனித வாழ்வின், சமுதாயத்தின் கருவாக அமைகிறது. ஆன்மீகத் தெளிவும், விஞ்ஞான மேம்பாடும், பொருளாதார உயர்வும், விஞ்ஞான மேம்பாடும், பொருளாதார உயர்வும், பண்பாட்டுக் கல்வியும், உலகத்தையே ஒரு சிறு கிராம்மாக ஒன்றிணைக்கும் தொழில் நுட்ப வளர்ச்சியும் மனித வளத்தை மேம்படுத்ததவில்லையெனில் அர்த்தமற்றதாகின்றன.
‘மனிதன் உலகில் உள்ள வளங்களைத் தன் வசதிக்கேற்ப மாற்றிக்கொண்டான். அவன் தேவைக்கு புதிய பொருட்களை உற்பத்தி செய்தான். அவன் ஏற்றுக்கொள்ளும், படைப்புகளும் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது’ என்கிறார் வில்லியம்ஸ் ஜேம்ஸ்.
எந்த மாற்றமும், உயர்வும் மனித வாழ்க்கைக்கு மெருக்கூட்டுவதாக இருக்கவேண்டும். வசதிகளைப் பெருக்கிக்கொண்டு வாழ்க்கையை இழந்து விடக் கூடாதல்லவா. இல்லையெனில் கண்களை விற்றுச் சித்திரம் வாங்கும் கதையாகிவிடும்.
இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிரினங்களிலும் தன் வாழ்வை, தன் வளத்தை, தன் உயர்வை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளவன் மனிதன் ஒருவனே! மனிதனே அவனது எதிர்காலத்தை உருவாக்கும் சிற்பி. தன் உள்முக மனப் பாங்கினை ஆக்கபூர்வமாக மாற்றிக்கொள்வதன் மூலம், தன் புற உலக வாழ்வையும் மாற்றிக்கொள்ளும் பெரும் பேறு பெற்றவன் மனிதன், இவ்வார்த்தைகளின் உண்மையை உணர்ந்தாலே, மனித வாழ்வு மேம்படும்.
எவ்வழியும் நல்லவராயிருக்க என்ன வழி? திறந்த மனமும், எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் தேவை. (Openness and accepting everything and anything) வாழ்வின் வளமனைத்தும் பெற வேடும் என்றால் முயற்சியும், பயிற்சியும் தேவை. முயற்சியின்றி எதையும் முனைப்புடன் துவங்க இயலாது. பயிற்சியின்றி எதையும் பழகி, பயனுற முடியாது. இரண்டும் அமைய வேண்டுமானால் திறந்த மனம் வபேடும். இங்குதான் என் உள்ளுணர்வின் வெளிப்பாடாய்த் தோன்றிய ஒரு சமன்பாட்டைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது.
ஆர்வமும், ஈடுபாடும் இணைந்து செயலாற்றும் போது முன்னேற்றம் என்பது தானாக நிகழும். எதிலும் ஆர்வம், எதையும் ஆர்வத்துடன் அணுகுவது, எதிலும் ஈடுபாடு, எதையும் ஈடுபாட்டுடன் செய்வது என்பது இருந்தால் தான் நம்முடைய வாழ்வில் மேம்பாடு அமையும்.
நம்மில் நிறைய பேருக்கு மிகுந்த ஆர்வம் இருக்கிறது. நிரம்ப பொருள் சேர்க்க வேண்டும். புகழ் பெற வேண்டும். ஞானம் பெற வேண்டும். மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆங்கிலம் பேச வேண்டும். அயல் நாடுகள் அகிலம் முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று பலவற்றிலும் ஆர்வம் உள்ளது. ஆனால் வெறும் ஆர்வம் மட்டும் நமக்கு வேண்டியதைப் பெற்றுத் தராது. ஆர்வத்துடன் இருக்கின்ற விசயங்களில் நாம் முழு மனதுடன் ஈடுபாடும் கொள்ள வேண்டும். அதேபோல வெறும் ஈடுபாடு மட்டும் வெற்றிகளை, உயர்வை ஈட்டித் தராது. ஒவ்வொருமுறை துடிப்புமிக்க ஆர்வம், உயர்வடைந்தே ஆக வேண்டும் என்கின்ற ஆர்வம் வேண்டும். ஆர்வமும், ஈடுபாடும், ஒற்றுமையும் முழுமையுடன் இணைந்தால்தான் உயர்வு என்கின்ற மேம்பாடு கிட்டும்.
– இளமுருகன்-