1990 களில் வயாவிளான் மக்களும் தாம் வாழ்ந்த வீடுகள்,கால்நடைகள், செல்லப்பிராணிகள்,தலைவணங்கிய கோவில்கள்,தேவாலயங்கள்,பாடசாலைகள் என்று அனைத்தையும் இழக்க வேண்டிய மனித பேரவலம் அந்த நாட்களில் எமது மக்களுக்கும் எமது ஊருக்கும் ஏற்பட்டது.
அந்த பாரிய பேரவலத்தின் பின்னர் சிறு சிறு தொகுதிகள் இப்போது ஆமை வேகத்தில் புத்துயிர் பெறுகின்றது . ஆமை வேகத்த்தில் விடுதலை பெற்ற இடத்தில் வயாவிளானின் ஒரு பகுதி தான் வடமூலை ஆகும்.
வடமூலை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் அருகே அமைந்த ஆலயம் தான் வடமூலை உத்தரி மாதா ஆலயமாகும். பாடசாலை காலங்களில் விளையாட்டு போட்டிகளும் ஆலயத்தின் சூழலில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வந்ததை அங்கு படித்த மாணவர்கள் அனைவருக்கும் நினைவுகள் மெருகூட்டிச்செல்லும்.
அவ்ஆலயம் இப்போது சிறப்புமிக்க முறையில் மீள் கட்டுமான பணிகளுக்கு தயாராகிவருகின்றது. அன்னையின் ஆசீர் வாதத்துடன் அனைத்து பணிகளும் சிறப்புடன் நிறைவேற அந்த அன்னையை நாமும் பிரார்த்திக்கின்றோம்.
“வயாவிளான் மக்கள் வாழ்வு மலர
எல்லா வரங்களும் அருளிய அன்னையே!
எம்மருள் உத்தரி அன்னை மரியே
உன் பாதம் பணிந்து தொண்டு வணங்குகின்றோம்”!