மயிலிட்டியின் சிறப்பான வெற்றியில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!

மயிலிட்டியின் மீட்பிற்காக ஆரம்பத்திலிருந்து நம்பிக்கையுடனும், மனம் தளராமலும் முன்னேறி ஆரம்ப கட்டமாக மயிலிட்டியின் இதயமான துறைமுகத்தை மீட்டெடுத்துள்ளோம். 03 ஜூலை 2017 அன்று மயிலை மக்கள் தாய்நிலத்திலும், புலத்திலும் அத்தருணத்தில் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 27 வருடங்களாக சோகத்தில் அழுதுகொண்டிருந்த மக்கள் அன்று ஆனந்ததில் அழுதார்கள்.

மயிலிட்டிச் சந்தி வரைதான் விடுவார்கள் துறைமுகம் விடமாட்டார்கள் என்றே பலர் எண்ணியிருந்தோம். மாறாக மேற்கிலிருந்து காசநோய் வைத்தியசாலை நிலம், துறைமுகம், கண்ணகை அம்மன் கோவில், முருகன் கோவில் என குறுகிய நிலப்பரப்பிலடங்கிய அனைத்தையும் விடுவித்திருக்கின்றார்கள்.
இந் நிலமீட்பிற்காக அயராது உழைத்த வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு, மயிலிட்டி மீள் குடியேற்றச் சங்கம், மயிலிட்டி கடல்தொழிலாளர் சங்கம், மயிலிட்டி கிராமிய அபிவிருத்திச் சங்கம், மயிலிட்டி கோவில் நிர்வாகங்கள், புனர்வாழ்வுச் சங்கங்கள் முக்கியமாக மயிலிட்டி மக்கள், ஆதரவாக நின்ற அயலூர் மக்கள், துணையாக நின்ற அரசியல்வாதிகள் என சகலருக்கும் மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் மேலும் இனிவரும் காலங்களிலும் எமது நிலமீட்பை முன்னெடுத்துச் செல்லும்போது அனைவரது ஆதரவையும் வழங்குமாறும் வேண்டுகின்றோம்.

கிட்டத்­தட்ட 27 வருட காலத் தவம் முடி­வுக்கு வந்­தி­ருக்­கி­றது. இனி­யொ­ரு­போ­தும் மீட்­கவே முடி­யாதோ என்று அச்­சப்­பட்ட நிலம் ஒரு­வாறு மீண்­டும் மக்­க­ளின் கைக­ளுக்­குத் திரும்பி வந்­துள்­ளது.



தமி­ழர்­க­ளின் அர­சி­ய­லில் அண்­மைக் காலத்­தில் அடைந்­தி­ருக்­கக்­கூ­டிய மிகப் பெறு­ம­தி­மிக்க அடைவு இது. தற்­போ­தைய அர­சி­யல் சூழ­லில் அதன் அர­சி­யல் பெறு­மதி உண­ரப்­பட்­டி­ருக்­கி­றதா என்­பது கேள்­விக்­கு­ரி­ய­து­தான்.
Picture
மேலும் இந் நிகழ்வை சிறப்பாக நெறிப்படுத்திய மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கம், மயிலிட்டி கடல் தொழிலாளர் சங்கம், மயிலிட்டி ஆலய நிர்வாகம் ஆகியனவற்றின் நிர்வாகிகளுக்கும் நிதியுதவி வழங்கியபுலம்பெயர் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

1990ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் திகதி மயி­லிட்­டித் துறைப் பகு­தி­யி­லி­ருந்து மக்­கள் வெளி­யே­றி­னார்­கள். பலாலி தரைப் படைத் தளத்­தி­லி­ருந்து படை­யி­னர் கடும் எறி­க­ணைத் தாக்­கு­த­லு­டன் முன்­னே­றத் தொடங்­கி­யதை அடுத்து மக்­க­ளும் கையில் கிடைத்தவற்றுடன் உயி­ரைக் கையில் பிடித்­த­படி ஓடி­னார்­கள்.

சில நாள்­க­ளில் படை­யி­னர் தமது முகாம்­க­ளுக்­குத் திரும்பி விடு­வர் என்ற எதிர்­பார்ப்­பி­லேயே போட்­டது போட்­ட­படி விட்­டு­விட்­டுப் புறப்­பட்­டார்­கள் அந்த மக்­கள். ஏனெ­னில் அது­வ­ரை­யான விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் தரைப் படை­யி­னர் தமது முகாம்­க­ளில் இருந்து முன்­னே­றி­வந்து தாக்­கு­வ­தும் திரும்­பிப் போவ­து­மான போர் உத்­தி­யைத்­தான் பயன்­ப­டுத்தி வந்­தார்­கள்.

ஆனால் எதிர்­பார்ப்­பு­களை எல்­லாம் பொய்ப்­பித்­துத் தாம் பிடித்த நிலத்தை நிரந்­த­ர­மா­கத் தக்க வைத்­துக்­கொண்­ட­னர் படை­யி­னர். விடு­த­லைப் போராட்­டத்துக்குப் பின்­ன­ரான காலத்­தில் தமி­ழர்­க­ளின் நிலம் நிரந்­த­ர­மாக ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட முதல் சந்­தர்ப்­ப­மாக அது அமைந்­தது. அந்­தத் துறைக்கு மீள, மக்­கள் 27 வரு­டங்­கள் கடும் தவம் இருக்க வேண்­டி­யி­ருந்­தது.

மயி­லிட்­டி­யில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்­கள் மல்­லா­கத்­தில் இடைத் தங்­கல் முகாம்­க­ளில் அமர்த்­தப்­பட்­ட­னர். கணி­ச­மா­னோர் வட­ம­ராட்சிப் பகு­திக்­குச் சென்­றார்­கள். போர்க் காலத்­தி­லும் போரின் பின்­ன­ரான காலத்­தி­லும் உள்­ளு­ரில் இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளின் குறி­யீ­டாக நீண்ட கால­மா­கத் திகழ்ந்­த­வர்­கள் இந்த மக்­கள்.

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சயிட் அல் ஹுசைன், பிரிட்­ட­னின் தலைமை அமைச்­ச­ராக இருந்­த­வ­ரான டேவிட் கெம­ரூன் ஆகிய தலை­வர்­கள்­கூட இந்த முகாம்­க­ளுக்கு வந்து இங்­குள்ள மக்­களை நேரில் சந்­தித்து அவர்­க­ளின் மீள்­கு­டி­யேற்­றம் குறித்து வலி­யு­றுத்­தும் அள­வுக்கு இவர்­க­ளின் பிரச்­சினை உல­க­ம­யப்­பட்­டி­ருந்­தது.

பன்­னாட்டு அழுத்­தங்­கள், போராட்­டங்­கள் என்று எல்­லா­வற்­றுக்­கும் மத்­தி­யி­லும் மயி­லிட்­டி­யைப் படை­யி­னர் விடு­விப்பார்­கள் என்று சில வரு­டங்­க­ளுக்கு முன்­னர் எவருமே நம்­பி­ய­தில்லை. நம்­பு­வ­தற்­கான வாய்ப்­பு­க­ளும் இருந்­த­தில்லை.

ஒரு சில வரு­டங்­க­ளுக்கு முன்­னர் வரை மயி­லிட்டி மக்­க­ளுக்­கே­கூட அந்த நம்­பிக்கை வலு­வாக இருந்­தது என்று சொல்ல முடி­யாது. தமது இடத்­திற்கு எப்­ப­டி­யா­வது போக­வேண்­டும் என்று அவர்­கள் விரும்­பி­னார்­கள். அதற்­காக அவர்­கள் தம்மை ஒறுத்­துத் தவம் கிடந்­தார்­கள். ஆனால் நம்­பிக்கை மிகச் சிறி­தா­கவே இருந்­தது.

‘‘மயி­லிட்­டியை அண்­டிய பகுதி வரைக்­கும் விடு­வார்­கள். ஆனால் மயி­லிட்­டியை விட­மாட்டார்கள் போலத்­தான் கிடக்­கி­றது’’ என்று சொன்­ன­வர்­கள் பலரை கடந்த காலங்­க­ளில் பார்க்க முடிந்­தி­ருக்­கி­றது. இன்று அந்த மண்­ணில் கால் பதித்து மக்­க­ளால் ஆடிப் பாட முடிந்­தி­ருக்­ கி­றது. ஆனந்­தக்­கூத்­தாட முடிந்­தி­ருக்­கி­றது.

source: ourmyliddy.com