வடக்கு மாகாண சபையில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி நீக்குமாறு கோரும் கடிதம் ஆளுநர் குரேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய முதலமைச்சராக சி.வி.கே.சிவஞானம் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையைத் தெரிவு செய்வதற்கான கூட்டம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக கிழக்கு மாகாணத்திலிருந்து கட்சியின் பொதுச் செயலரும் வருகை தரவுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி நீக்குமாறு கோரியுள்ளமையால், புதிய முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள், மார்டின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று கூடி ஆராயவுள்ளனர்.
இதன்போது, புதிய முதலமைச்சராக, சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.