கங்காரு நாட்டு வயவர்களின் நிதி உதவியில், போரினால் பாதிக்கப்பட்ட போராளி குடும்பம் ஒன்றுக்கு, மலசலக்கூடம் ஒன்றை வயாவிளான் மக்கள் ஒன்றியம் அவுஸ்ரேலியாவின் நேரடி தொடர்பில் அமைத்து கொடுக்கப்பட்டது. கிட்ட தட்ட ஒரு இலட்சம் இலங்கை ரூபா பெறுமதியான அந்த திட்டத்துக்கு, அவுஸ்ரேலியா வாழ் வயவர்கள் பங்களிப்பு செய்ததாக அங்கு இருந்து வரும் தகவல் ஊடக அறிய முடிகின்றது. இந்த திட்டம் செடோ (SEDO) என்னும் அமைப்பின் கண்காணிப்பில் நடைபெற்றது.
அத்தோடு கங்காரு நாட்டு வயவர்களின் இரண்டாவது வெளிமாவட்ட திட்டம் இதுவாகும். கடந்த வருடம் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு குழாய் கிணறுடன் ஒரு தொட்டியையும் அமைந்து கொடுத்தமை இங்கு குறிப்பிட தக்கது. வயாவிளான் இன்னும் முழுமையாக விடுபடாமையின் காரணத்தால், இனி வரும் காலங்களிலும் இப்படி போரால் பாதிக்க பட்டவர்களுக்கு சிறு சிறு திட்டங்களை அவர்கள் செய்ய உள்ளதாக நம்பப்படுகின்றது.
காலத்தையும் கடமையும் அறிந்து செயல்பட்ட, வயாவிளான் மக்கள் ஒன்றியம் அவுஸ்ரேலியாக்கும், அங்கு வாழ் வயவர்களுக்கும் வயாவிளான் இணைய நிர்வாகம் சார்பான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.