கல்வி மட்டுமே எவராலும் அளிக்க முடியாத சொத்தும் சக்தியும் ஆகும் இவ்வுலகில். இன்றைய நவீன உலகில் வறிய சொந்தங்கள் ஏழைகளுக்கு கொடுப்புவர்களை விட தங்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்புக்கு கொட்டும் பணம் அதிகமாகும். பெற்ற பெற்றோர் வயிற்றை கட்டி வாயை கட்டி, தங்களின் பிள்ளைகள் எதிர் காலத்தில் இந்த சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே பல அர்பணிப்புக்களை செய்து, தமது பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்.
2018 நடந்து முடிந்த புலமை பரிசில் பரீட்சசையின் பெரு பேறுகள் இணையங்கள் ஊடாக பார்க்கும் போது, எமது வயவை மண்ணின் குட்டிகளும் அதிகமான பெறுபேறுகள் பெற்று, அழியா சொத்து கல்வி எனபதை நிரூபித்துள்ளனர். இவர்களின் இந்த சாதனைக்கு ஊக்கமளித்து உழைத்த அனைத்து ஆசிரியர்கள் மற்றும் குட்டிகளின் குடும்பதத்தினருக்கு வயாவிளான் இணையம் சார்பாக எமது பெருமித்த அந்த வாழ்த்துக்களை அனைத்து குட்டிகளுக்கும் ,ஆசிரியர்களுக்கும் ,குடும்பத்தினருக்கும் தெரிவித்து கொள்ளுகின்றோம்.