யாழ். வலிகாமம் வடக்கில் முப்பது வருடங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வயாவிளான் தெற்கு வைரவர் ஆலயம் உட்பட அதை அண்டிய பகுதிகள் விடுவிக்கப்படுள்ளது.
இந்நிலையில், குறித்த ஆலயத்தில் வைரவர் மடை, விசாகப் பொங்கல் இடம் பெறும் போது மட்டுமே மக்கள் வழிபாட்டுக்கு சென்று வர இராணுவத்தினர் அனுமதி வழங்கி வந்தனர்.
குறித்த ஆலயத்தையும் அதை அண்டிய இடங்களையும் விடுவிக்குமாறு, ஆர்ப்பாட்டம் முதல் பல தரப்பட்ட முயற்சிகளை அவ்வூர் சார்ந்த மக்கள் முன்னெடுத்து வந்ததும் இங்கு குறிப்பிடதக்கது.
யாழ் மாவட்ட கட்டளைத்தளபதிக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆலயமும் அதை அண்டிய குறுகிய இடமும் விடுவித்தது அவ் வாழ் மக்களை சந்தோசத்தில் ஆழ்த்தி உள்ளது.
இனி வரும் காலங்களில் தமது ஊர் முழுமையாக விடுபட வேண்டும் என்றே மக்கள் எதிர் பார்க்கின்றனர்..