இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட காங்கேசன்துறையின் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு தமிழ் பாடசாலை மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் தமிழ் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிக்கு, கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.அவர்கள் இராணுவம் ஆக்கிரமித்த பாலாலி விமான நிலையம் மற்றும் கங்கேசன்துறையிலுள்ள பெரிய இலங்கை கடற்படை தளத்திற்கும் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.இலங்கை இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள விடுமுறை விடுதியான தவ்செவனாவிற்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.இந்த பயணத்தில் 8 ஆசிரியர்கள் மற்றும் 69 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த பயணம் பற்றி கருத்து வெளியிட்ட ஆசிரியர்கள் “எப்பொழுதும் மறக்க முடியாத அனுபவமாக” இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.