எம்மைப்பற்றி

வயவை உறவுகளுக்கு வணக்கம்!!!

நாங்கள் ஒரு இணையத்தளத்தை வடிவமைத்து அதன் ஊடாக எங்கள் மண் வாசனை சார்த்த நிகழ்வுகளையும் செய்திகளையும் எம் உறவுகளுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த வயாவிளான் இணையம் ஆரம்பிக்கப்பட்டது.

இது ஆஸ்திரேலியாவை தளமாக கொண்டே இயங்குகின்றது. இது எந்த ஒரு தனிநபர் இலாபம் கருதியோ இல்லை புகழ் தேடியோ ஆரம்பிங்க படவில்லை என்பதை திட்ட வட்டமாகவும் ஆணித்தரமாகவும் உங்களுக்கு அறியத்தருகின்றோம்.”வயாவிளான் இணையம் எப்பவுமே எம் ஊரின் சொத்தே…….

எம்மை பற்றி ஒரு சிறிய குறிப்பையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றோம். நாங்கள் சிறு வயதில் ஆஸ்திரேலியாவுக்கு வந்தாலும் எங்கள் ஊர் மண்வாசனையுடன் தான் நாம் இங்கு வாழுகின்றோம் உங்களைப்போல்!! எங்கள் ஊரை விட்டு நாங்கள் வெளியேறி கிட்ட தட்ட முப்பது வருடங்கள் உருண்டு ஓடி விட்டன. அந்த நாட்களில் கைவிட்டு என்ன கூடிய ஒரு சிலரிடம் மட்டுமே புகைப்படம் எடுக்கும் கருவிகள் இருந்தன. இந்த இணையம் வடிவமைப்புக்கு ஒரு சில உறவுகள் மட்டுமே புகைப்படங்களை அனுப்பி இந்த இணைய வடிவமைப்புக்கு உதவினர். மிகுதி எல்லாமே இணையம் ஊடக தான் சேகரிக்க பட்டது . அதில் ஒரு சில தவறுகள் இருக்கலாம், இருப்பின் எங்களை மன்னித்து உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்ளுகின்றோம் .எதிர் வரும் காலங்களில் அவற்றை சரி செய்து நல்லதொரு ஒற்றுமையானதும் ஆரோக்கியமானதுமான ஒரு சமுதாயத்தை கட்டி எழுப்ப எங்களால் முடிந்த ஆதரவையும் முயற்சியையும் அளிப்போம் என்று இத்தால் உறுதி அளிக்கின்றோம்.

எமது ஊர் ஆளுநர்களின் பிடியில் இருந்து விடுபட்டு , கட்டி எழுப்ப படுமாயின் நாம் அனைவரும் ஒன்றாக செயற்பட்டு காலத்தின் ஓட்டத்துக்கு ஏற்ப எங்களை மாற்றி அமைத்து எங்கள் ஊருக்காக அனைவரும் உழைக்க வேண்டும் என்பதை அனைவரும் மறந்து விடுதல் கூடாது. ஆறுகள் கிளைகளாக ஓடினாலும் கடைசியில் சங்குமிக்கும் இடம் கடல் போல நாங்கள் அனைவரும் வெவ்வேறு திசைகளில் ஓடினாலும் சேரும் இடம் ஒன்றாக இருக்க வேண்டும்.

வயாவிளான் இணையத்தளத்தில் உங்கள் ஆக்கங்களையும் படைப்புக்களையும் திறமைகளையும் எமக்கு அனுப்பி வைக்கும் இடத்து அதை நாங்கள் மேல்பார்வை செய்த பின்பு இணையத்தில் உங்கள் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும். அதேபோல மரண அறிவித்தல்கள் , எமது ஊர் நிகழ்வுகள் ,பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்பவற்றையும் இலவசமாக பிரசுரிக்கலாம் என்பதை அன்பாக அறியத்தருகின்றோம். நன்றி வயாவிளான் இணைய குழுவினர்.